கிணத்துக்கிடவு, ஜன.04:
நேற்று (03.01.2026) கோவை மாவட்டம், கிணத்துக்கிடவு வட்டத்திற்குட்பட்ட வடசித்தூர் ஊராட்சி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு அரசின் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் வடசித்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை பெற்றனர். முகாம் முழுவதும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டமிட்ட முறையில் செயல்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில், வடசித்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஒருங்கிணைப்புடன் இந்த முகாம் நடத்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய இயக்கமும் இந்த மருத்துவ முகாமிற்கு முழுமையான ஆதரவு வழங்கி, முகாம் வெற்றிகரமாக நடைபெற உதவியது.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளுக்கும் முன்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுந்த ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சிகிச்சை பெற்ற பயனாளிகள், இந்த முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்து, ஏற்பாட்டாளர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு சென்றனர்.

No comments:
Post a Comment